உலகின் முதல் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடிக்கும் மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் விழா அண்மையில் (17) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரத்தியேக அதிதிகள் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் முக்கிய நினைவு உரையை பேராசிரியர் சரத் விஜசூரிய நிகழ்த்தினார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர,

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர்களான சரத் ஏக்கநாயக்க, பாண்டு பண்டாரநாயக்க, முன்னாள் ஆளுநர் கோப்து பண்டாரநாயக்க, பைஸர் முதுகஸ்கித. இந்நிகழ்வில் பெருமக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.